மயிலாசனம்
பல்லவ நாட்டு
சிற்பிகள்..
செதுக்க மறந்த சிலையே..
தப்பித்தாய் ..நீ.!
இல்லா விட்டால் என்றைக்கோ
கடத்தியிருப்பார்கள் உன்னை!
ரவி வர்மா வரைய
மறந்த ஓவியமே..
தப்பித்தாய் ..நீ.!
இல்லா விட்டால் என்றைக்கோ
எடுத்திருப்பார் பெருந் தொகைக்கு
ஏலத்தில் உன்னை!
தங்க மயிலாசனத்தில்
உட்கார வைத்திருந்தால் உன்னை
எடுத்துக் கொண்டு
பறந்திருப்பான் வெள்ளைக்காரன்!
எப்படியோ இதுவரையில்
எவரது கண்ணும்
பட்டிடாத தேவதையே!
உன்னை..
அப்படியே எனக்காக
அளித்தான் தேவன்
உன்..
காதல் என்னும் துடுப்பு போதும்
கரை சேர்ப்பாய்
என்னை!