காதலிக்கு ஓர் கடிதம்

அடி என்னவளே..!!
"காதலிக்கு ஓர் கடிதம்.".
என்று தலைப்பு மட்டும் கொடுத்து விட்டேன்..!
ஆனால்...உள்ளே எதை பற்றி எழுவது என்றே புரியவில்லை..!!
ஒருவேளை உன்னை போல்..
மௌனமாக இருந்து விடலாமோ..!?
ஆனால் அருகில் நீ இல்லையே..!!
இருந்திருந்தால் உன்னை பேச வைத்து..
நான் மௌனமாக ரசித்தாலே போதுமே...!!
அதுவே கவிதை ஆகிவிடும்..!!
இங்கே ..
சிலர் எழுதும்..கவிதைகளை ..
எல்லாம் படிக்கும் பொது..
தெரிந்த கொஞ்சம் தமிழ் வார்த்தைகள் கொண்டு..
எங்கே நான் உனக்கு கவிதை படைக்க..!? ம்ம்ம் ..!? நீயே சொல்லு..!!
அதனால் இங்கு உனக்கு கடிதம் எழுதுகிறேன்..!
ஒருவேளை நீ விரும்பி படிக்கும்போது ...
இந்த கடிதம் ..கவிதையாக மாறாலாம்..!!

கடிதம் என்று சொன்னவுடன்...
ஒன்று நினைவுக்கு வருகிறது....
.நான் உனக்கு கைப்பட எழுதிய அந்த முதல் கடிதம்...!!
எத்தனை வசதியான தகவல் தொடர்பு சாதனங்கள் வந்தாலும் ..
கைப்பட எழுதும் கடிதங்கள் போல வருமா?
அதுவும்..உனக்கு எழுதிய அந்த முதல் கடிதம் போல் வருமா..?
அதில் எழுதியது என்னமோ சில வரிகள்தான்..
அனால் அந்த வரிகளுக்கு பின்னால் ஆயிரம் ஆவல்கள்..!!

சரி ..கடிதத்தை ..பற்றி எழுதியது போதும்..
எழுத வேண்டிய ..கேட்க வேண்டிய விசயத்திற்கு வருவோம்..!!

உன்னை அன்பே என்றேன்..
அன்பான ஒருத்தியை அனுப்பி வைத்தாய்..!!
அழகே என்றேன் ..அதற்கும் அழகாய் ஒருத்தி..
..
செல்லமே , கண்மணியே என்றேன்,,,
அதற்கும் அந்தந்த வார்த்தைகளால் அடிகடி
அழைக்கப்பட்டவர்கள் எல்லாரையும் அனுப்பி வைத்தாய்..!!

ஆனால் அத்தனை வார்த்தைகளும்....உன்னை அழைக்க நான் பயன்படுத்தியது என்று ஏன் ஒரு கணம் கூட நீ சிந்திக்க வில்லை என்னவளே ...!!

....சரி சரி.. நேரம் ஆகி விட்டது...
மற்றவை அடுத்த கடிதத்தில்....!!

எழுதியவர் : ஸ்ரீ (4-Oct-14, 9:24 pm)
சேர்த்தது : ஸ்ரீ சரவணன்
பார்வை : 167

மேலே