நீ அறிவாய்…

பாலைவனம் என்றறிவாய் என் மனது
அதனை சோலையாக்கி வைத்தவள் நீ….
முட்படுக்கை என்றறிவாய் என் வாழ்க்கை
அதனைப் பஞ்சு மெத்தையாக்கிவைத்தவள் நீ..

குற்றுயிர்ப் பறவை என்றறிவாய் என் இதயம்
அதற்கு உயிர் தந்து உயிர்ப்பித்தவள் நீ…..
சேற்று நிலம் என்றறிவாய் என் உணர்வு
அதிலே செந்தாமரையாய் பூத்தவள் நீ…

உணர்வற்றவை என்றறிவாய் என் கால்கள்
அதனை ஊண்று கோல் போல் தாங்கியவள் நீ..
பட்டமரம் என்றறிவாய் என் உடல்-அதில்
வசந்த காலத்தை வரவைத்துப் பார்த்தவள் நீ..

இத்தனையும் செய்துவிட்டு –என்னை
ஏணியிலே ஏற்றிவிட்டு நட்டநடு வீதியிலே
விட்டு விட்டு எங்கே நீ சென்றாயோ…..

எழுதியவர் : நா.சிறிதரன் (4-Oct-14, 9:35 pm)
சேர்த்தது : சிறிதரன்
பார்வை : 81

மேலே