தேமாங்காய் ருசி

நீதந்த ஆனந்தம்
நீங்காது எப்போதும்
தூங்காது என்கண்கள்

சொல்தந்தாய்!பாதந்தாய்!
வேதந்தான் நான்கற்க,
பாதந்தா!தூயோனே!

பாட்டாலே யாத்திட்டேன்
பற்றாலே கேட்டிட்டேன்
காட்டாதே கோபந்தான் !

என்வாழ்வைக் காத்திட்டாய்
உன்பேரை சொல்லிட்டால்
விட்டோடும் துன்பங்கள்!

காட்டிட்டாய் உன்னன்பை
தேற்றிட்டாய் என்நெஞ்சம்
பாட்டுக்கு வித்திட்டாய் !

எழுதியவர் : அபி (4-Oct-14, 10:35 pm)
பார்வை : 55

மேலே