நீதியும் நீரும்

தமிழ் நாட்டுக்கு என்று
நீர் முளைக்க வேண்டுமென்றாலும்
நீதி பிறக்க வேண்டுமென்றாலும்
கர்நாடகத்தில் அல்லவா
காத்துக்கிடக்க வேண்டியதிருக்கிறது.

நீர் கிடைக்கவும்
தாமதமாகிறது.
நீதி கிடைக்கவும்
தாமதமாகிறது.

என்றாலும்
அஞ்சாமல் தீர்ப்பு சொன்ன
குன்ஹாவும்
அன்று
இந்திராவுக்கு தீர்ப்பு சொன்ன
சின்ஹாவும்
சிங்கங்கள் தானே!

எழுதியவர் : மோசே (5-Oct-14, 1:22 pm)
சேர்த்தது : மோசே
பார்வை : 134

மேலே