காமமின்றி

கோபமின்றி பேசிப்பார்
குழந்தைத்தனம் மிளிரும்
பாசமாக இருந்துபார்
தென்றலின் இதந்தெரியும்
நிகராக மதித்துப்பார்
மறுபாதி உயிர்சேரும்
நட்பாக நடந்துபார்
பெண்களின் வலிவேதனைபுரியும்
தீயவைகளை துரத்திப்பார்
தேவதைகள் அருகில்வரும்
நேசத்தோடு நடத்திப்பார்
இனியவை நிகழும்
பண்பாக நடந்துபார்
இன்பம் பெருகும்
காமமின்றி பழகிப்பார்
பெண்மையெனும் பூமலரும்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (5-Oct-14, 2:38 pm)
பார்வை : 231

மேலே