நீருக்குள் மூழ்கிய ஆகாயம்- சந்தோஷ்
நீருக்குள் மூழ்கிய ஆகாயம்
-------------------------------------
வாழ்வவே
என் வாழ்வே..!
உன் மைதானத்தில்
மூச்சிறைத்து ஓடுகிறேன்
முத்திரை ஒன்று கேட்கிறேன்
உன்னை புரிந்து
உன்னை வெல்ல
ஏதோவொரு வாய்ப்பு கொடு.
முடியும் முடியும்
என்று
முயற்சிக்கிறேன்
ஆனால்
நீ
முடியாது முடியாது என்றே
மெளன அதிகாரம் செய்கிறாய்
ஒரு திசையில்
சென்றால்
எட்டுதிசையிலும்
பிரச்சினையை வைக்கிறாய்.
ஒரு பெண்னை
காதலித்தால்
ஓராயிரம் பெண்களை
என்னை காதலிக்கவைக்கிறாய்
கடந்த நாட்களை
கண்டால்
எல்லாம் மாயை
கடக்கப்போகும் நாட்களை
நினைத்தால்
ஒரே பிரம்மை.
ஒரு குளத்தின்
நீருக்குள் மூழ்கிய
அந்த ஆகாயத்தை போல
நீயும் மாயம் செய்கிறாய்
என்னை மயக்கியே
பிரம்மிக்க வைக்கிறாய்.
நீ ஒரு மாயை
நான் அதில் தொலைகிறேன்.
-இரா.சந்தோஷ் குமார்
பி:கு தங்கை மகிழினி கொடுத்த தலைப்பு. தலைப்பு கொடுத்த நிமிடத்திலிருந்து 10 வது நிமிடத்தில் கவிதை பதிவு செய்வதாக ஒரு சவால் விட்டேன். பதிவும் செய்துவிட்டேன். 10 நிமிடத்தில்தானா என்பது மகிழினி தான் தீர்ப்பு சொல்லவேண்டும். :)