இது ஒன்றும் புதிதல்லவே
தோற்று பழகியவன் நான்
தமிழ் அன்னையே...!
உமக்கு என் தோல்வியை
காணிக்கை செய்கிறேன்
என்ன..? முழிக்கிறாய்..!
நான் தான் வெற்றி பெற்றதே கிடையாதே
நான் பெற்ற தோல்வியினால் துவள வில்லை ஆனால்
கவலையினால் அழுதுள்ளேன்
மறு கனமே கண்ணிர் துடைத்து கனவுலகம் செல்வேன்....
பல மேடைகளில் தோற்று போவேன்
என்று தெரிந்தே தோற்றுள்ளேன்
இது ஒன்றும் எனக்கு புதிதல்லவே
பொங்கிக்கொண்டு வரும் கண்ணீரை எல்லாம்
புன்னகை கொண்டு புதைத்துள்ளேன்
எனக்கென ஒரு வெற்றி கைதட்டல் நான் கேட்டதே இல்லை
எனக்காக கைதட்டுங்கள் என்றும் நான் கேட்டதே இல்லை
அப்படி ஒரு கைதட்டல் எனக்கு தேவையும் இல்லை
தவறாக ஏதேனும் பேசியிருந்தால் மன்னித்துவிடு
தமிழ் அன்னையே
உன்னை விட்டால் நான் சொல்வதை கேட்க யாரும்
தயாராக இல்லையே
என்றும் பாசத்துடன்
உன் இளைய மகன்
- த.மா.ச.கவிதாசன்