இறைவனுக்கு நன்றி
நடந்து செல்பவன் கனவு
நான்கு சக்கர வாகனம் என்றால்
பறந்து செல்பவனோ
நிலத்தினை ஏக்கமாய் நோக்குகின்றான்!
வாடகைக்கு வாழுபவன் கனவு
சொந்தமாக ஒரு வீடு என்றால்
மாளிகையில் வசிப்பவனோ
ஊரை வளைத்திட ஏங்குகின்றான்!
எத்தனை கிடைப்பினும் சில மாந்தர்க்கு
என்றுமோர் குறையுண்டு வாழ்வதற்கு!
நிறைவுடனே வாழும் மனம் கிடைத்தவர்க்கு
எதிலும் இன்பமே எந்நாளும் துன்பமில்லை!