குறுந்தகவல்

விரல்கள் விளையாட இது பிறக்கும்.....
அவரவர்க்கு பிடித்த ஒலியுடன் இது வெளிப்படும்.....
எண்ணத்தை இது பிரதிபலிக்கும்...............
தனிமையில் இருப்பவருக்கும் இது நண்பனாய் இருக்கும்......
இதை கண்ட
சிலருக்கு சந்தோஷம் சிறகடிக்கும்................
சிலருக்கு கோபம் வெடிக்கும்.......
சிலருக்கு துன்பம் தொற்றிக்கொள்ளும்.........
விரல்களாலேயே இது மடிந்துபோகும்..........
தினம் தினம் பிறந்து........தினம் தினம் மடியும்..........