என்ன வேண்டும்

அம்மையப்பனை வேண்டிடும் அன்பர்கள்
அன்பே சிவமென்று சொல்வதும்..
அருளுரை கீதையில் ஆண்டவன்
சொன்னதை செய்திடும் கர்ம வீரரும்
அஸ் சலாமு அலைக்கும் என்று
அமைதி சமாதானம் பெருகிட வாழ்த்தும்
நண்பர்கள் அத்தனை பேரும்..
உன்னைப் போல் உன் அயலானை நேசி
என்னும் விவிலியத்தின் வழி நடக்கும்
இறை விசுவாசிகளின் எண்ணம் எதுவும்..
நாடுவது ஒன்று மட்டுமே..
அது போரில்லா உலகம்..
போட்டியில்லா இதயம்..
அன்பினால் உயரும்
அணையில்லா இன்பம்!
அழிவில்லா மனித நேயம்!
ஈதன்றி..
மற்றவை யாவும் பகல் வேஷம்..
அவர் வாழ்வது நரக தேசம் !