மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்
வேதனை என்றால் அர்த்தம் தெரியாமல்
துன்பங்கள் என்றால் என்னவென்று புரியாமல்
முயலாய் துள்ளி திரிந்த நாட்கள் அவை...........
வகுப்பில் முதல் ஐந்து தரத்திற்குள்
வர வேண்டும் என்பதை மட்டும்
தலையாகிய கடைமையாய் கொண்டு
பத்து மார்க் குறைந்தாலும்
பதறி போய் விடைத்தாளை
சரி பார்த்த நாட்கள் அவை...........
சனி ஞாயிறு விடுமுறையின் போது
பொய்கள் பல சொல்லி - அம்மாவிடம்
அனுமதி வங்கி பக்கத்து தோப்பிற்கு
விளையாட சென்ற நாட்கள் அவை...........
சொல்லுவது பொய் என்று தெரிந்தும்
அதை நம்பும் பாவனையில்
தலை அசைத்து அறிவுரைகள்
பல கூறி அம்மா விளையாட
அனுப்பிய நாட்கள் அவை...........
சின்னஞ்சிறு தோப்பை
அடர்ந்த காடாக எண்ணிக்கொண்டு
கற்பனைகள் கொண்டு
புது புது பாத்திரங்கள் படைத்தது
கையில் கோலோடும்(குச்சி)
தலையில் (இலை) கிரீடத்தோடும்
நாடகங்கள் பல அரங்கேற்றிய
நாட்கள் அவை...........
வாழ்வில் மீண்டும் வரதா என்று
எண்ணி எண்ணி ஏங்கிய
நாட்கள் தான் அவை...........
நாட்காட்டியில் கிழிக்கப்பட்டாலும்
மனதில் ஒட்டிக்கொண்ட
நாட்கள் தான் அவை...........
என்றும் மறக்காத
மறக்கவும் முடியாத
மீண்டும் ஒரு முறை
வாழ்ந்துவிட துடிக்கும்
குழந்தை பருவ நாட்கள்.....