பன் முகப் புத்திக் கூர்மை

மனித மஊளையின் செயல்பாட்டின் பல நுனுக் கங் களை தன் ஆய்வில் கண்டறிந்தார் ஹவார்ட். அவற்றுள் நம்மை அசரவைத்தது போல ஒரு கண்டு பிடிப்பும் உள்ளது. அது மனிதர்களுக்கு பன் முகப்பட்ட புத்திக் கஊர்மைகள் உண்டு என்பதை நிரூபிக்கின்ரது. இப்படியாக, மனிதரிடத்தில் எட்டு வகையான புத்திக் கஊர்மைகள் உள்ளன என்பதனை காணக் கூடியதாக இருக்கின்றது. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடலாம் என்கின்றார் அவர். ஆனால், சந்தேகத்திற்கு அப்பால் அனைவரிடமும் பன் முகப் பட்ட புத்திக் கஊர்மைகள் உண்டு. ஒரு வேளை, பன் முகப் பட்ட புத்திக் கூர்மை தன்னை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். அந்தத் திறன்களை வளர்த்தெடுக் கவும் முடியும். அல்லது, பயன் படுத்தாமல் நீர்த்துப் போகச்செய்யவும் முடியும். ஆகவே, படித்தவற்றை ஒப்பிப்பதோ அல்லது எழுதுவதோ ஒரு வகை அறிவுத் திறன் மட்டுமே. அதைத் தவிர வேறும் பல திறமைகளும் இருக்கவே செய்கின்றன.

எழுதியவர் : புரந்தர (8-Oct-14, 10:05 am)
சேர்த்தது : puranthara
பார்வை : 103

மேலே