வழி மாற்றும் விழி மொழிகள்

விழிகள் பேசினால் மொழிகளே தேவையில்லை என்பார்கள். அதிலும் பெண்களின் கண்கள் பேசினால் சொல்லவும் வேண்டுமா? அவைகளிலும் மேலானவை காதல் நங்கையரின் விழி மொழிகள்! இவர்களின் விழி மொழிகள் ஆடவரின் வழிகளை மாற்றும் இயல்புடையன. அன்று முதல் இன்று வரை இலக்கியங்களுக்கு விருந்தாய் அமைவன. அன்று சொட் சித்திரமாய் சித்தரித்த பெண்ணின் விழிகளை இன்று சினிமா உயிரோவியமாக காண்பிக்கின்றன. இத்தகு பெண்ணின் கண்ணழகை பாடாத கவிகளே இல்லை எனலாம்.

கண்கள் கட்பனைகெட்டாத கதைகள் பேசும். பெண்களின் கண்களை - மான்விழி, மீன் விழி, வாள் விழி, வேல்விழி, கதிர்விழி, கயல்விழி, சுடர்விழி, சுடும் விழி, மலர் விழி, மை விழி என்று எல்லாம் கவிஞர்கள் வர்ணிக்கின்றனர். இத்தகு பெண்களின் கண்கள் குளிர்மை செய்வன. கொடுமையும் செய்வன. இங்கே, ஆடவரின் வழி மாற்றும் விழி மொழிகள் பற்றி பார்ப்போம்.

காதலின் பிறப்பிடமும் கருணையின் இருப்பிடமும் விழிகள் தான். ஒருவரின் மனதில் உள்ளவற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டுவன விழிகள். இதனால் தான், விழிகள் மனதின் யன்னல்கள் என்று ஷேக்ஸ்பியர் கூருகிரார். மனோவியல் கூருகிரது எல்லோரது கண்களிலும் வசீகரிக்கின்ற காந்த ஷக்தி உண்டு என்று. ஒருவரை பார்வையாலே வசியப்படுத்த முடியும். அதிலும் பெண்களின் பார்வைத் திறனில் எல்லயற்ற சக்தி அடங்கியுள்ளது. அச் சக்தி காதல் பிரவாகத்தை ஊற்றெடுக்க வைக்கும்.

காதலின் ஊற்றுவாய் விழிகள். இதனால்,தான் 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே' என்று காதலர்கள் தங்களுக்குள் மெச்சுகின்றனர்.

எழுதியவர் : புரந்தர (8-Oct-14, 6:24 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 299

சிறந்த கட்டுரைகள்

மேலே