அவள் பெயர் பட்டாம் பூச்சி

வண்ண வண்ண உடையணிந்து
தினம் என் தோட்டம் வருவாள்
என் தோட்டத்து பூக்களோடு
உறவு கொள்ள

அவள் உடையின் வண்ணம்
பல கதைகள் சொல்லும்
அதில் துன்பம் இல்லை
பல இன்பம் உண்டு

அவள் அருகே செல்ல
எனக்கு அனுமதியில்லை
மீறிச் சென்றால் பறந்தோடி
விடுவாள்

என் தோட்டத்து பூக்கள்
மேல் பொறாமை
அவளுக்கு பிடித்தவை பூக்கள்
மட்டும் என்பதால்

ஒரு நிமிடமாவது பூவாக
இருக்க பிரியப்படுகிறேன்
அவளின் சகவாசம் எனக்கும்
கிடைக்கும் என்பதால்

அவளை தினம் காண்கையில்
கண்களில் குளிர்ச்சி
அவள் அழகை புகழ்வதில்
வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி

அவள் பெயரை என் வாய்
தினம் ஆயிரம் தடவை கூறும்
அவள் பெயர் பட்டாம் பூச்சி

எழுதியவர் : fasrina (9-Oct-14, 9:44 am)
பார்வை : 177

மேலே