காரணமான கண்களே

காரணமான கண்களே ......!!!

பூக்கள்
வாடுவதுபோல் ...
என் கண்களும் வாடுகின்றன ...
என் காதல் நோய்க்கு
காரணமான கண்களே ......!!!

நான்
வாடுவதுபோல் ..
என் கண்களும் வாடுகின்றன ...
ஒருவகையில் எனக்கு
இன்பம் தான் - என்னை வாட
வைத்த கண்கள் வாடுவதால் ...!!!


திருக்குறள் : 1176
+
கண்விதுப்பழிதல்
+
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 96

எழுதியவர் : கே இனியவன் (9-Oct-14, 10:55 am)
பார்வை : 59

மேலே