வாறியாடி வாக்கப்பட்டு

கண்கட பார்வபட்டு
கண்ணுறக்கம் கலைக்கபட்டு
சொக்கித்தான் போனேன் சற்று
சிலிர்தெழ உரக்க குட்டு...

மேலாட காத்துப்பட்டு
உள்ளமெலாம் லேசுபட்டு
ஏழெட்டு நாளும் கெட்டு
ஏங்கித்தான்போனேன் சிட்டு...

மாலைநேர சாரல்பட்டு
மோகத்தீயும் மூட்டப்பட்டு
தேகம்மெல்ல சூடுபட்டு
தகிக்குதடி விட்டுவிட்டு...

நெருங்கி இன்னும்வாடி சொட்டு
அருகே வந்து மாமனமுட்டு
எலும்பு நொறுங்க இறுக்கிகட்டு
இனிப்புகட சீனிலட்டு...

சுற்றும் முற்றும் நோட்டம் விட்டு
ஆளரவம் ஆற்றிவிட்டு
வாறியாடி வாக்கப்பட்டு
வாங்கிதாரேன் கூறப்பட்டு...

எழுதியவர் : ரி.எ .விமல் (9-Oct-14, 11:42 am)
சேர்த்தது : ரி.எ .விமல்
பார்வை : 60

மேலே