அன்பின் அவஸ்தை

அன்று இருந்த அன்பு
இன்று இல்லையே

இன்று இருக்கும் வெறுப்பு
அன்று இல்லையே

இரண்டையும் காட்டுவது
நீதானே அன்பே

இவை எனக்குப் புரியாத
புதிராக உள்ளது அன்பே

நீ என் உயிர் இல்லை
நீ என் நிழலும் இல்லை

ஆனாலும் என்னுடனே
வருகின்றாய் நான்
எங்கு சென்றாலும்

இவை நிஜத்தில் இல்லை
இருதயத் துடிப்பில் அன்பே

நீ திட்டு தாங்கிக் கொள்வேன்
நீ அடி வாங்கிக் கொள்வேன்

மறக்காதே தாங்க மாட்டேன்
வெறுக்காதே தூங்க மாட்டேன்

நீ சிரித்துப் பேசினால் மகிழ்வேன்
நீ சோகமாய் பேசினால் துவழ்வேன்

எதுவுமே பேசாமல் இருக்காதே
எதை எதையோ நினைக்கிறேன் நான்

உன் அன்பான வார்த்தை
அம்பாக மாறினாலும்
அதையும் நான் ஏற்றுக்
கொள்வேன் அன்போடு

புரிதல் இல்லாப் பிரிவை நெருங்காதே
புரிந்த உறவை பிரிய விரும்பாதே

உயிர் பிரியும் வரை நான்
உயிராக நினைப்பேன்
உன் உறவை என்றும் அன்பே

விருப்பு வெறுப்பு உரிமை உள்ள
ஒருவரிடம்தான் காட்ட முடியும்
அதையே நீ செய்வதாக எண்ணி
நான் உன் அலட்சியத்தை
ஏற்றுக் கொண்டேன் இன்று அன்பே

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (9-Oct-14, 10:16 pm)
Tanglish : anbin avasthai
பார்வை : 246

மேலே