வாழ்த்து மடல் == திரு பழனிகுமார் எழுத்து தளம்
உணர்வுகளை உணர்வலைகளாய் கோர்த்து
உன்னதமான கவிதைகளாய்
உவகையுடன் சர மாய் பின்னி
உங்கள் பிறந்த நாளன்று
"உணர்வலைகளுக்கு " ஜனனம் அளிக்கும்
உங்கள் வல்லமைக்கு ஒரு மணிமகுடம் !!
சாந்தம்,சந்தோசம்
சலமனமற்ற மனநிலையை செவ்வனே பெற்று
சமுதாயத்தை சமன் படுத்தும்
சாட்டையடி கவிதைகளை
சுவையாய் படைத்தீர் !!
எழுத்துக்களில் நளினம்
எண்ணங்களில் இளமை
எழில் மிகு புன்னகை
ஏற்றமிகு நட்பு வட்டம்
ஏணியில் ஏற்றியது உங்கள் புகழை !
மனிதனின் மூன்றாம் கையான
தன்னம்பிக்கையில் மிடுக்குடன் நடை போடும்
திரு பழனிகுமார்
உணர்வலைகள் ஓய்வடையாமல்
கடல் அலைகளாய் உயர
எல்லா வல்லமையும் பெற
வளமான ஆரோக்கியமான வாழ்விற்கு
வளமான வாழ்த்துக்கள்!