தேவதைகளின் இரவு உடை

அன்பே .......
பொழுது போகாதபோது
வீட்டுத்தோட்டத்தில்
ரோஜாக்களோடு
பேசிக்கொண்டிருப்பேன்
என்கிறாய் !
சரிதான் .......
ஒரு ரோஜா
இன்னொரு ரோஜாவோடுதானே
பேசமுடியும் !
==============================
ஏதோவொரு
போட்டியில்
நீ
வென்றாய் !
பரிசு பெற்றது
பரிசு !
==============================
குட்நைட்
நீ சொன்னால்
சட்டென்று
விடிந்து தொலைக்கிறது
என்
இரவு !
==============================
கஷ்டப்பட்டு
ஒழுங்குபடுத்தி
வைக்கிறேன்
என் மனதை !
அடிக்கடி
உடை சரிசெய்து
அதைக் கலைத்து விடுகிறாய் !
==============================
உன்னால்
அணியப்பெற்றால்
சாதா கண்ணாடியும்
குளிர்கண்ணாடியாகும் !
உணவு உண்ண
நீ சென்றால்
நடுத்தர உணவகமும்
நட்சத்திர உணவகமாகும் !
==============================
கடவுளின்
கடைக்கண் பார்வை
என் மீது படுகிறது
அடிக்கடியான
உனது
திரும்பிப் பார்த்தல்களில் ...........
==============================
உன்னைப் பார்த்த
ஆதாரத்தில்தான்
சொல்கிறேன் .........
தேவதைகளின்
இரவு உடை
நைட்டி !
==============================
நீயெடுத்த
செல்ஃபியின் முன்பு .........
பிகாசோ
ஓவியமும்
தோற்றுப்போகிறது !
==============================
அலங்காரம்
இல்லாவிட்டாலும்
அம்மன்,
அம்மனே ..
மேக்கப்
இல்லாவிட்டாலும்
நீ,
நீயே ............
==============================
உன்
வெட்கத்தைப் பற்றி
எழுத முனைந்தேன் !
வெட்கப்பட்டு
ஓடி
ஒளிந்து கொண்டன
வார்த்தைகள் !
==============================
பேசப்படுவதும்
பாடுபொருளாகிறது
அதை
நீ
பேசினால் ..........