வேறு எதுவும் தெரியாது - இராஜ்குமார்

வேறு எதுவும் தெரியாது
=====================
இலையின் நுனியில்
கீழே வேகமாய் விழும்
நீர் துளியை மறுத்து
வேரின் நுனியில்
மேலே மெதுவாய் ஏறும்
நீர் துளியாய் உன் நினைவு .!
விழியில் விழுந்த
மண்துகள் - எந்தன்
கருவிழி ஆழம் பார்க்க
மனதில் விழுந்த
உன்விழி - எந்தன்
இதய வலியால்
தாகம் தீர்த்தது
தோல்விகள் மட்டுமே
என்னிடம் வெற்றி பெற்றாலும்
பெண்ணே ...
எனக்கு ...
உனை பற்றி எதுவும் தெரியாது
உனை தவிர வேறு எதுவும் தெரியாது
- இராஜ்குமார்
நாள் : 25 - 11 - 2012