முதல் முத்தம்
சட்டென மனதில் மலர்வனம்
சுற்றி யாரும் இல்லா மௌனம்
இதயம் பரிமாறும் நேரம்
இமைகளின் ஓரத்தில் மோகம் !!
இந்த நிமிடம் நீளாதா
என ஏங்கும் எண்ணத்தால்
தனை அறியாமல்
தன்னவனை கட்டிகொண்டாள் !!
இளஞ்சூடு கொண்ட
மார்பில் முழுவதுமாய்
முகத்தை புதைத்து
முழுவதுமாய் தனை மறந்தாள் !!
கண்ணன் அவன்
இரு கரங்களையும் சேர்த்து
இருக்கமாய் முகத்தை தூக்கி
எண்ணில் அடங்கா காதலை
கன்னியின் கண்ணில் கண்டதால் !!
காதலை கொண்டு
முதன் முதலில்
முகத்தை மூடிய
முதல் முத்தத்தில்
முழுவதுமாய் தனை தொலைத்தாள் !!