தலைவியின் காத்திருப்பு -4
கோபக்கார மச்சானுக்கு
கொளத்துமீனு கொழம்புவச்சி
கொமரிப்பொண்ணு காத்திருக்கா
குத்தவச்சி தானிருக்கா...
கொழம்பு வாசம் ஆளதூக்கும்
கொமரிநேசம் மனசிழுக்கும்
தெருவழியே நடந்தாலும்
நம்மநாக்கில் நீர்சுரக்கும்...
%%%
கொஞ்சிபேசும் மச்சானுக்கு
கெண்டமீனு கொழம்புவச்சி
மச்சான் எப்போ வருவாகனு
வாசலிலே காத்திருக்கா
கெண்டகாலு செவப்பழகி
செதுக்கிவச்ச மாரழகி
கோடாலி கொண்டக்காரி
கொழம்பு செய்ய கெட்டிக்காரி...
%%%
கெளுத்திமீச மச்சானுக்கு
கெழங்காமீனு கொழம்புவச்சி
போனமச்சான் வருகைக்காக
பொழுதுமுழுக்க காத்திருக்கா
இல்லாத இடுப்பழகி
எலந்தபழ நெறத்தழகி
பேகனவன் வருகைக்காக
தோகமயில் காத்திருக்கா...
%%%
பாசக்கார மச்சானுக்கு
பாறமீனு சொதியும்வச்சி
பாதையோரம் விழியைவச்சி
பகல்முழுக்க காத்திருக்கா
கத்திவீசும் கெண்டமீனு
நயணம்கொண்ட நளினக்காரி
பரிசம்போட்ட மச்சானுக்கு
பசலையோட காத்திருக்கா...
%%%
அயிரமீனு கொழம்புவச்சி
அய்யாரெட்டு சோறுவச்சி
ஆம்பல்கொடி இடுப்பழகி
அதிரம்சிந்தும் உடலழகி
ஆசமச்சான் வருகைக்காக
அந்திவர காத்திருக்கா...
மத்திமீனு கொழம்புவச்சி
மணக்கும்நெல்லு சோறுவச்சி
முத்துப்பல்லு சிரிப்பழகி
மரிக்கொழுந்து மனசழகி
மாலையிட்ட மச்சானுக்கு
கதவதொறந்து காத்திருக்கா...
வாளமீனு வருத்துவச்சி
வரகரிசி சோறுவச்சி
வறுமையான இடுப்பழகி
வாழப்பூவு குருத்தழகி
வளந்த மச்சான் வருகைக்காக
வழிநெடுக பாத்திருக்கா...
கொரவமீனு கொழம்புவச்சி
குறுனயரிசி சோறுவச்சி
கூரான கண்ணழகி
குயவன்செய்த பேரழகி
குடும்பக்கார மச்சானுக்கு
கொழலுநீலி காத்திருக்கா...
மேற்கு செவந்துடுச்சி
பறவகூடு சேர்ந்துடுச்சி
போனமச்சான் காணலையே
பொழுதெறங்கி போயிடுச்சே
கட்டிகரும்பழகி கண்ணீர்சிந்தி காத்திருக்கா...!
பிரியாராம்.