போன பாசம் கிடைக்குமா

பிரிந்துபோன என் வாழ்க்கை
பிரிதென்ன பயன் ..............

நோய்நொடி பல கடந்து
நொந்து போன நானும்,

பாசம் எனும் வலையை விட்டு
பறந்து திரிகிறேன்...............

சேர்த்த செல்வம் எல்லாம்
சேர்ந்தா வரும் .........

கோடிக் கணக்கான மக்கள் உள்ளம் --அங்கு
கொடுமை நிறை வாழ்விலே ............

நான் மட்டும் தப்புவேனா ..........
எப்படி முடியும் ..........

எல்லாம் முடிந்துவிட்டது --என்று
என்னால் சொல்ல முடியுமோ.................

நான் மறைந்து போனாலும்
நாகரீகம் அங்கு வளர்ந்து கொண்டு தானே..........

குட்டிக் கரணம் போடாமல் இருக்குமோ --இங்கு
குடிகாரக் கும்பலும் .............
நான் இல்லை என்று ,,............

பாவி நானும் திரும்பி வர முடியுமா?
மண்ணுக்குள்ள போயிட்டா..........

பரிகாரம் தான் பண்ண முடியுமா?--என்
பாவத்தைச் சொல்லி .............

செய்வதை எல்லாம் செய்துவிட்டு
செய்வதறியாது திகைக்கிறேனே.........

காதல் என்னும் பாதை தேடி
கவிதையிலே உறவாடி ----

வாழ்ந்த நாட்கள் --இங்கு
வாடைக் காற்றாய்.............

என்ன என் வாழ்க்கையும் --என்று
ஏங்கி அழ --நான் என்ன
ஏழு மாத குழந்தையா?..........

போன பாசம் கிடைக்குமா?
பொங்கி வழிகிறது --என்
கண்ணில் நீர்..............

எழுதியவர் : ஜேம்ஸ் (10-Oct-14, 4:15 pm)
சேர்த்தது : டார்வின் ஜேம்ஸ்
பார்வை : 95

மேலே