வழி மாற்றும் விழிகள்

திரு வள்ளுவர் வடித்த சொல்லோவியம் கம்பனின் காவியத்தில் எழிலோவியமாக மிளிர்கிறது. மிதிலா மாநகர் வீதிதன்னில் விசுவா மித்திர முனிவரும் தம்பி இலக்குமணன் உடன் வர இராமன் நடை பயின்று வருகின்றான். பெண்ணலம் அனைத்தும் அமையப் பெற்றவளாகி - போதின் நறு மணமாக - தேனின் தெவிட்டாத தீன் சுவையாக - செம்மை சால் சொல்லில் வடித் தெடுத்த கவியின்பமாக அந் நகரின் மேல் மாடத்தில் உள்ள சீத்தா பிராட்டியை காண்கின்றான். இதனைக் கம்பன், 'எண்ணறு நலத்தினாளியை நின்றளிக் கண்ணோடு கண்ணினைக் கவ்வி ஒன்றினை ஒன்று உண்ணவு நிலை பெற உணர்வுமொன்றிட அண்ண லும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்' என்று சினிமாவில் கதாநாயகர்களை அறிமுகம் செய்யுமாப் போல கஊறுகின்றார். வான் மீகி காணாமல் இருந்த கற்பனை இன்பத்தை காட்டு கின்றார். சீதை - இராமன் இருவரில் இராமன் தான் சீதையை முதன் முதலாக சீதையை நோக்கியதாக கம்பர் குறிப்பிடுகிறார். அது அவர் ஓசை நயம் கருதிச் செய்து உள்ளார் என்பதை விளக்கு கிறது. இருவரது பார்வையும் இரு கூரிய ஈட்டிகளாகி அவர்களைத் தைத் திருப்பதை, 'நோக்கிய நோக்கெனும் நுதி கொள் வேலினை யாக்கிய மதுகையான் ற்றூலில் ஆழ்ந்தன வீக்கிய கணை கழல் வீரர் செங்க ணும் தாக்கங் கனை வடனத்திட் இறைத்தவே'. என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

எழுதியவர் : புரந்தர (10-Oct-14, 6:27 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 144

மேலே