குறளும் கவிதையில் பொருளும் - இன்பத்தின் இருப்பிடம்

அழகைக் காண்பது
கண்ணுக்குச் சுகம்...
இசையை ரசிப்பது
காதுக்குச் சுகம்...
தேனைச் சுவைப்பது
நாவுக்குச் சுகம்..
பூவை நுகர்வது
நாசிக்குச் சுகம்....
மென்காற்றின் தழுவல்
மேனிக்குச் சுகம்...

மெத்தச்சரி

இத்தனை சுகமும்
மொத்தமாய் வேண்டும்.
எவ்விடம் கிடைக்கும் ?

அவ்விடம் கிடைக்கும்
அதோ
அந்தப் பெண்ணிடம் கிடைக்கும்.

(கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள - 1101)

எழுதியவர் : (11-Oct-14, 3:52 pm)
பார்வை : 53

மேலே