மதுரை

மீன் ஆட்சி செய்யும் ஊர்..
ஆம், எங்கள் மீனாட்சி வாழும் ஊர்...

தென் தமிழகத்தின் சொர்க்க வாசல்
எப்பொழுதும் திறந்தே இருக்கும் எங்கள் இதய வாசல்...

இது போன்ற ஊர் உலகில்
எந்த நாட்டிற்கு கிட்டும்...
இவ்வூரால் எங்கள் புகழ்
எட்டுத் திக்கும் முரசு கொட்டும்....

இதை கண்டுருகாத கவிஞர்கள் இல்லை..
இதை போற்றி பாடாத புலவர்கள் இல்லை..
இதை இயற்றி எழுதாத இலக்கியவான்கள் இல்லை...

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு...
நலிந்தோரையும் வாழ வைக்கும் எங்கள் பாண்டிய நாடு...

பிழை இழைத்த சிவனுக்கே
பிரம்படி கொடுத்த ஊர்...
தவறு செய்பவன் தலைவனாயினும்
அவனை தண்டிக்கும் ஊர்...

மதுரையின் பெருமை
மல்லிகைப் பூவில் மட்டுமல்ல....
மல்லிகைப் போன்ற எங்கள் மனதிலும் தான்...

மல்லிகையின் வாசத்தால்
மதிமயங்கி போனாலும்
மதிமழுங்கி போக மாட்டோம்...

நல்லவர்களுக்கு விழாவும் எடுப்போம்..
கெட்டவர்களின் விலா எலும்பையும் எடுப்போம்...

அறிவாலும் பேசுவோம்
அரிவாளாலும் பேசுவோம்

நாள்தோறும் ஓயாமல் உழைப்போம் - அதனால்
தூங்கா நகரம் என்று அழைப்போம்....

கோவில்களை கண்டு மலைப்போம் - அதனால்
கோவில் நகரம் என்றும் அழைப்போம்...

சரிவில் வீழ்ந்தாலும்
அறிவில் எழுவோம்..

வியர்வை சிந்தி
உயர்வை அடைவோம்...

கண்ணகியின் கோபத்தால்
அவள் விடுத்த சாபத்தால்
மதுரை அழிந்தது - அன்று !!

எத்தனையோ கண்ணிப் பெண்களின்
பார்வையிலேயே நெருப்புத்
தெரிகின்றது தெரிக்கின்றது - இன்று !!!!!!!

எழுதியவர் : (11-Oct-14, 3:26 pm)
Tanglish : mathurai
பார்வை : 313

மேலே