மிளகாய் பட்டாசு

கடித்தால் காரம்நானே
வெடித்தால் வீரம்தானே
நீடித்தால் சரம்நானே
பிடித்தால் வீரம்தானே

திரிகிள்ளி என்னைக்கொல்ல
கொள்ளி வைப்பீர்களே!
மெல்லமெல்ல பற்றவைத்துப்பின்
தள்ளி நிற்பீர்களே!

குழந்தைகளின் மகிழ்ச்சிக்காய்
நான்பலியாகிறேன் மகிழ்ச்சியாய்
என்னைத் தயாரிப்பவர்களும் சிலநேரம்
பலியாகிறார்கள் பிறரின் மகிழ்ச்சிக்காய்!

உங்கள் மகிழ்ச்சிதான் என்பிரதானம்
என்மகிழ்ச்சி என்னவென கேட்பீரோ..
பிஞ்சுகளால் பயன்படுத்தப்படலாம் நான் -- ஆனால்
பிஞ்சுகளால் தயாரிக்கப்படாமல் மாற்றப்படலாமே!

என்னைத் தயாரிக்கும் தொழிலாளருக்கும்
பாதுகாப்பான சூழல் கொடுக்கலாமே!
வெள்ளைவேட்டிகள் வரவேற்பில்
வெடிப்பதில் வெறுப்பாகிறேன், நிறுத்துவீர்களா?

நடுஇரவில் தூக்கம்கெடுக்க
என்னைப் பயன்படுத்துவீர்களே
அதை நிறுத்துவீர்களா?

சரத்தில் வெடிக்காமல்
சிதறிய என்னைத்தூக்கிகொண்டு
ஓடும் ஏழைக்குழந்தையோடு
தீபாவளியைப் பகிர்வீர்களா?

நான் வேண்டுவதெல்லாம்
என் மரணத்திற்குமுன் நான்
கேட்கும் எனது இறுதி ஆசைகள்
இவைகளை நிறைவேற்றி
எனது மரணத்திற்கு
அர்த்தம் கொடுங்கள்
இப்படிக்கு மிளகாய் பட்டாசு...!

எழுதியவர் : அலெக்சாண்டர் (12-Oct-14, 1:10 am)
பார்வை : 99

மேலே