யாரை நம்புவது எனக்கேதும் புரியல

யாரை நம்புவது எனக்கேதும் புரியல
நானும் நல்லவனா அதுகூட தெரியல
வாழ்க்கை எதுவென்று கொஞ்சமும் விளங்கல
இறந்த பின் செல்லும் இடம் ஏதும் தெரியல

பாவ உலகிலே நானும் பிறந்தேனே - மீண்டும்
ஜென்மம் அதை நான் மறந்து போனேனே

பிறப்பு இறப்புகிடையே இத்தனை வேற்றுமையா
புரிந்தும் மனிதர்தம்மை மறந்து நடிக்கிறாரோ
பொய்யான வாழ்க்கை இது - நான்
தான் எனது உனது ஏன் இந்த வஞ்சனையோ

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (12-Oct-14, 3:18 am)
சேர்த்தது : SritharanC
பார்வை : 669

மேலே