நிலாக் கள்வன்

நிலாக் கள்வன்
================

இவன்தானே
உன் ஏக்கம் தின்ற
தனிமையின் புலம்பல்களை அள்ளி
ஆந்தைகளின் ஓலங்களுக்கு
இரையாக்கிச்சென்றவன்
இவன் இராட்சத இறகுகளால்
விடியாத இராவுகளோடு உன்னை சிறைசெய்துப் போனவன்
இதோ இன்றுன் மூச்சிரைப்பு
பெருமூச்சாகிறது பார்
இவன் நுண்ணிய சிவந்த கண்களுடனான
கண்டுமுட்டல்களின் போதெல்லாம்

என் மீதமற்ற அடிசில் நீ
ஒரு பருக்கையின் எச்சத்தைக்கூட
யாராலும் நெருங்கவியலாது எனைமீறி

கிழிக்காத காற்றும் இடம் தேடிடும் இடரில் ...
முட்டாத நாசி முடமாகிடும் மூச்சில்
தட்டாத பாகங்கள் தளர்ந்தாடிடும் தாளத்தில் ,,
எட்டாத நோயும் குலைக்கொய்திடும் உன் இரவை ,,
நிதம் நினைக்காத இவனை நீ நினைக்கின்ற தருவாய்

மடி கொடுக்க அஞ்சுகிறாய் அஞ்சுகமே
மழைக்கொட்டாத மஞ்சும் இடம் தேடிடும் பொழிய
மனம் தாளாத இடியில் இசலாடிடும் இதயம்
விழி மூடாத பாகம் இடைத்தேடிடும் நளினம்
கதை சொல்லாத நேரம் உன் மடிதேடிடும் மயங்கி

மரணித்து கிடப்பாய் கண்டாயா
இடியோசை இதய ஒசை
துயிலா இமை அசையும் மௌன ஒசை நிறுத்தி
உன் மடிதுயில மேல்மாடி போகலாமா ம்ம்,,
வானம் காய்கிறது உன் வரவுக்காய் என்பேன்
நிலா காயலா என்றாள்

பைதல் நிலவே நீதானே ம்ம் நீயற்ற வானமேது
நான்தானே உன் வானம் என்றதில்
மதியின் மனதின் முன்பு
எனையன்றி யாதுமே கருந்திரைக்கட்டின அவளில்

மேல்மாடி என் மார்பு
வானம் நான்,,நிலவு நீ
வேறென்ன வேண்டும்
இனியும் அருஞ்சொற் பொருள்
ஆதலால்தான் கவிதை நாம் என்றதும்
சாகசக்கில்லாடி நீ
பேசு பேசு இன்னும் பேசு என இலயித்து
நிலவிற்காக காயும் வானமா நீ என்றவள்
என் சொல்லால் பிடியிறுக்க அதினுள் கட்டுண்டாள்

ஆம் ஒளிந்து தோன்றும் குழந்தை நிலவை
ஆட்கொண்டுவிட்ட வானம் நான்தான்
என்று நெட்டிக்கச்சிரித்தபோது

எப்பக்கம் ஒளிந்தாலும் ஒளிர்ந்தாலும்
உனக்குள்தானே நான்
எனச் சரணடைந்தவள்
என் கெண்டைக்கால் ஒற்றை மயிரிழையை
நான் "இஸ்" என்று முனங்க செல்லமாகப் பிடுங்குகிறாள்

பெண் தொடாத பரப்பினால் நீலம்பூசிய புடவை நெய்து
கவிகையாகக் காத்திருக்கிறேன் ,,
நீயோ தொடாமலும் படாமலும்
தேய்கிறாய் வளர்கிறாய் யாருக்காய் நிலவே
என்ற என் கைக்கிளை முறித்த முதற்நாளில்
நிலவாக நானிருக்க
நீயேன் மினுக்களிடம் மோகங்கொள்கிறாய்
நான் தேயும்படி வான்தலைவா
என குதர்க்கம் பேசுகிறாள்

சமாளித்தாக வேண்டுமே என்ன செய்ய
உடனே ஒரு பொய் உரைப்பேன்
ஒன்பது கோள்களில்
நீ ஒருவள் மட்டும் எப்படியடி குளிர்கிறாய்
என்று இதம் மூட்டியவன் பின்பு உதடு கடித்து
ஒரு பேச்சிற்காகத்தானே சொன்னேன் நீ அழகி என்று
அதற்காக இப்படியா அழகாக
வந்துநிற்பது என் முன்னே எனவே

என் மூக்கின் நுனிபிடித்து சிவக்கக்கிள்ளிவிட்டு
கனவுகள் நிறுத்தி
ஒருவரும் காணாத
என் போர்வை இருள் பிரதேசத்திற்குள்
அனுமதியின்றி நுழைந்துவிட்டாள்
மீண்டும் வெளிச்சமாகி,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (12-Oct-14, 3:02 am)
Tanglish : nilaak kalvan
பார்வை : 241

மேலே