இரண்டு இடத்தில் காதல் - இராஜ்குமார்
இரண்டு இடத்தில் காதல்
========================
சிரிக்கும் முன்
அழுத எனக்கு
பின்
சிரிக்கும் போதும்
அழுகை வந்தது ..
இரண்டு இடத்திலும்
காதலே ..
உணர்வுகள் மிதந்த
ஓர் உரிமை குரல்
கரை சேர்ந்தும்
கலங்கியே நிற்கிறது ..
அலையில் யாரோ
அடித்து போனதால் ..
கரையில் நின்றதும் காதல்
அலையில் சென்றதும் காதல்
கடமை
தனது உடமை
இழந்தே நிற்கிறது
மகளாகவும்
மகனாகவும் ....
அன்பு நிறைந்தே
அமைதியாய் நிற்குது
பெற்றோர் முன் ...
அனுமதி கேட்டு ..
இரண்டு இடத்திலும்
காதல் ...!
- இராஜ்குமார்
நாள் ; 10 - 12 - 2012