கண்முன் வந்த சாட்சி

இரவு போர்த்திய
நிறைவு வேளை
உருமாறும் நிழல்
வழிமாறும் திசை
பரிமாறும் விசை
மெல்லிய நீரோடை இறுக்கத்தில்
நிர்வாண கப்பல் .....

துடிப்பான வேகத்தில்
துடுப்போடு இளைஞன்
இன்றைய கட்டுமரத்தில்
நிச்சயமில்லாத அடுத்தநாள் வாழ்க்கை
கரைசேர்வோமென்ற நம்பிக்கை
உணர்வுகளின் பரிதவிப்பு
உயிர்களின் கோரிக்கை
கடல் மீன்களின் கூட்டுப்பிராத்தனை ....

அசூர வளர்ச்சியின்
அட்டூழியங்களை அழித்து வருகிறான்
எல்லைக்கோடுகளை எரித்து வருகிறான்
மீண்டு வருகிறான்
மீண்டும் மீண்டும்
நெருங்கி வருகிறான் ............................
காதல் மனைவியின் கனவு கலைந்தது
கண்ட காட்சி கண்முன் நின்றதால் ..........

எழுதியவர் : சுமி (12-Oct-14, 4:56 pm)
பார்வை : 96

மேலே