என் தேசம்

வானம் என்னும் தேசத்திலே
வசிப்பவர்களின் நேசத்திலே
வைத்திட்ட முத்தங்கள் தானோ
நட்சத்திரங்கள் !

ஏழை என்றும்
பணக்காரன் என்றும்
என் வானம்
பார்த்ததில்லை !

சூரியனாய் சந்திரனாய்
சூட்சுமங்கள் ஏதும் இன்றி
பாரதத்தை வழி நடத்த
பாலகனே
பயிற்சி கொள்
பறித்துக்கொள் !

எழுதியவர் : tania (12-Oct-14, 5:31 pm)
Tanglish : en dhesam
பார்வை : 93

மேலே