ஏதோ சிந்தனை-வித்யா

ஏதோ சிந்தனை......!-வித்யா

எங்கே அந்த சிறு துளை...?
இந்த வன் வெறுமையும்
அடர் இருட்டும்
எனைக் கொன்று தின்னும் முன்
நான் வெளியேற வேண்டும்......!
எங்கே அந்த சிறு துளை....!!

வடிகட்டாத வார்த்தைகள்
என் நாவிலிருந்து
விழுந்த போது.....


துடிதுடித்து மரணம்
தழுவிக் கொண்டிருந்த
அந்த இதயத்தின்
கதறல் கேட்டுக்கொண்டே நீளும்
இந்த இரவைக் கடக்கும்
முயற்சிகள் யாவும்
தோல்வியையே தழுவட்டும்....!!

பறக்கத் துடிக்கும் சிறகுகள்
விசாலமாக விரியும்
காற்றைக் கிழித்து
விண்ணுயரம் குறைத்து
இன்னுமின்னும்.....மேலே மேலே முன்னேறும்.........

இவ்வாழ்க்கை சுழற்சியில்
வாழ் அல்லது வாழவிடு
என்பது போய்
வாழ் அல்லது மரணம்தொடுவென்பதே
உன்னதமானது.......!!

எழுதியவர் : வித்யா (12-Oct-14, 9:42 pm)
பார்வை : 149

மேலே