+விழாக் கண்டேன்+

கண்டேன் கண்டேன் விழாக்கண்டேன்
இனிக்கும் தமிழ்மொழியாம் பலாக்கண்டேன்
கொண்டேன் கொண்டேன் மகிழ்ச்சிகொண்டேன்
இணையத்தில் கண்டுமிக நெகிழ்ச்சிகொண்டேன்
இதயத்தை கொள்ளைகொண்ட நிகழ்ச்சியிது
இதமாக சிந்தனையை கிளப்பியது
உதயத்தை கண்டயிந்த உணர்வலைகள்
உலகத்து மாந்தர்களை உடனேவெல்லும்
தோழர்கள் பலரும்அழகு மேடையேறி
தெளிவாகத் தமிழ்பேச நானும்கேட்டேன்
விழாநாயகர் பணிவாக அமர்ந்திருந்து
கலகலவென இடையிடையே சிரிக்கக்கண்டேன்
சிறப்பாக நடந்தமுடிந்த விழாக்கண்டு
சிறைபட்ட கற்பனையும் தப்பித்ததே!
பொறுப்பாக ஒருகவிதை எழுதிமுடித்து
பொன்னுள்ளம் கொண்டோருக்காய் சமர்ப்பித்ததே!