இந்த நீண்ட இரவை ஆள

நெருங்கி வருகிறாய் கரை விழுங்கும்
அலையாய்

உனக்குள் காதல் அணுவை கண்டறிந்து
ஒரு கவிதை சொல்வேன்

ரோஜாவின் வாசத்தை வேர் அறிவுமா
அதானால் நீராகி போகிறேன் உன் தேகம் தொட

தனிமையை போட்ட தாழ்ப்பாளை கதவை தட்டும்
தாபால் காரன் நீ

கண் மூடி இருக்கிறேன்
கதை ஓன்று சொல் நீ " உன்னை ஆளும் ராணி நான் " என்று

அந்தி வானம் மறையும் முன்

வஞ்சம் நிறைந்த உன் நெஞ்சை
வென்று வாகை சூடுவேன்

இந்த நீண்ட இரவை ஆள !!!

எழுதியவர் : வேலு (13-Oct-14, 12:14 pm)
பார்வை : 102

மேலே