தாமதம்

நான்...
வாழ்வின் உயரங்களை
அடையும் முன்
உன் நிராகரிப்பை
ஏற்றுக் கொண்டேன் ..
உயரங்களை அடைய ..
பள்ளங்களில் விழுந்து விடாமல்
என்னை தடுத்ததால்..
உன் நிராகரிப்பு கூட
நன்மையானது எனக்கு..!
இன்று ..
உன் மறு பரிசீலனைக்கு
மனுப் போட விழையும் போது ..
அறிந்தேன்..
மிகவும் தாமதமாகி விட்டதென்று..
எப்படி இருந்தாலும்
நீ வாழ்க!
மஞ்சளுடன்
குங்குமமாக!

எழுதியவர் : karuna (13-Oct-14, 4:00 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : thaamatham
பார்வை : 201

மேலே