மழையானவன்
மழைபொழியும்
விழாப் பொழுதுகளில் - ஏனோ
மனம் மயங்குகிறது
உன் நினைவில்
மண்ணில் விழும்
துளிகளெல்லாம்
என்னில் நிறைந்திருக்கும்
உன்
சொற்களை நினைவுகூறும்
புவிக்காதலியோடு கொஞ்சி
புலனாடிட
மண்ணிறங்கும்
மழையின் காதலில்
சிறிதளவு கூடவா
உனக்கில்லாமல் போனது?
மண்ணோடு உறவாடி
அழுக்கான மழையை காண்கையில்
புலம்பிட தோன்றுகிறது எனக்கும்
மறுப்பேதும் சொல்லாமல்
மௌனமாய் ஏற்றுக்கொள்ளும்
பூமகளை காண்கையில்
உன்நிலை பாவமென்று புரிகிறது
கலந்துரையாடல் முடிந்து
காதலிக்கு விடை சொல்லிவிட்டான்
மழைமகன்
ஒரு போர் முடிந்த
யுத்தக்களமாக - சற்றும்
சலனமற்று கிடக்கிறாள்
காதலில் களித்த பூமகள்
நான் மட்டும்
உன் நினைவில்
நனைந்தபடியே!