வரதட்சணை

ஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்
அமைகின்ற நேரத்தில் கேட்டானே............

மகிழ்ச்சியாய் செல்ல மகிழுந்து.......
சொகுசாய் வாழ சொக்கத் தங்கம்.......
வசதியாக வாழ ரொக்கப்பணம்.........

கொடுக்க வழியன்றி தவித்தனரே பெற்றோரும்.......

இது அன்று நடந்த கதை.

ஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்
அமைகின்ற நேரத்தில் கேட்டாளே.........

சொத்துக்களுடன் சொகுசு வாழ்க்கை.......
நாத்தி இல்லா நல்வாழ்க்கை..............
பெற்றோர் இல்லா பெரும் வாழ்க்கை........

எடுத்து கூறினரே அவனின் பெற்றோரும்.............
புகை,மது இல்லா, ஒழுக்கமுள்ள நல்லவரன் இவன்.....

அதைப்பற்றி கவலையில்லை - பணமில்லாமல்
ஒன்றும் நடக்காது என்றாளே!

இது இன்று நடக்கும் கதை.

சொத்திற்கும், பணத்திற்கும் பேயாக அலைகின்ற - மனிதர்களே.
வரும்போதும் போகும்போதும் ஒன்றுமில்லை - நம்மிடத்தில்
இடையில் மட்டும் ஏன் இந்த ஆட்டமெல்லாம்.
மனிதத்தை மறந்தோமே மதியிழந்து போனோமே - இனியேனும்
மனிதத்தை வளர்ப்போமே........மனிதர்களாய் வாழ்வோமே.

எழுதியவர் : இராம்குமார் (14-Oct-14, 4:20 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 171

மேலே