எழுத்துகாம் நண்பர்களுக்கு இது ஒரு பசுமை வேண்டுகோள்

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இது ஒரு மழைக்காலம்...! மரம் நடும் நேரம் ...!

எழுத்து.காம் நண்பர்களுக்கு ஓர் பசுமை வேண்டுகோள் ....!

நண்பர்களே நாங்கள் வசிக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இரு மாதங்களுக்கு முன் முக்கிய பிரமுகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது அனைவருக்கும் பயனும் பசுமையும் கொடுக்கும் என்பதால் இந்த பதிவு ....!

இது மழை காலமாக இருப்பதால் மரம் நடுவதில் பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை ஏற்ப்படுத்தி செடிகளை நட்டு நமது நகரை பசுமையாக்க வேண்டும். பார்க்கும் இடங் களில் எல்லாம் பசுமை பூ பூத்து சிரிக்க வேண்டும் எனவே இந்த ஆண்டு மழை காலம் முடிவதற்குள் சுமார் இருபதாயிரம் மரங்களை நட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது இரண்டு வருடங்களுக்காவது தண்ணீர் விட்டு அதனை வளர்த்து பெரிதாக்க வேண்டும் என்றும் நமது பெருந்துறை பகுதியை பசுமையாக்கி அதன் செயல்பாடுகளின் வெற்றியை தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் செயல் படுத்த வேண்டும் என்றார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு தோப்பு என். டி. வெங்கடாச்சலம் அவர்கள். மேலும் ஊட்டி போல் பெருந்துறை பகுதியை பசுமையாக்க வேண்டும் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் மரம் வளர்ப்பு பற்றி பேசி மரம் வளர்ப்பை தீவிரமாக வலியுறித்தினார் ..!

அதன் விளைவாக எங்கள் பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற தொழில் அதிபர்கள் .. கல்வி நிறுவன பிரமுகர்கள் .. சமூக ஆர்வலர்கள் என நாங்கள் சிலர் ஒன்று திரண்டு " பெருந்துறை பசுமை இயக்கம்" என்ற ஒரு புதிய அமைப்பை துவக்கி அதனை முறைப்படி பதிவும் செய்தோம். செடிகளை வளர்க்க தண்ணீர் லாரி ஒன்று வாங்கப்பட்டு தினசரி சுமார் 600 செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி தற்பொழுது வரை சுமார் 7500 செடிகள் வைக்கப்பட்டு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது .

மேலும் அனைத்து சாலைகளின் இரு பகுதிகளிலும் விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இருந்து செடிகளை காப்பாற்ற மூங்கில் கூண்டுகள் வாங்கி வைத்து சிறப்பாக பாதுகாப்பு கொடுத்து வருகிறோம். தற்பொழுது நன்கு வளர்ந்த செடிகள் கூண்டுக்கு வெளியே எட்டி நம்மை பார்க்கும் பொழுது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எங்கள் மாவட்டத்துக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம். பிரபாகரன் அவர்கள் முதன் முதலாக பெருந்துறை சிப்காட் தொழில் அதிபர்கள் வாய்த்த 1500 மரகன்றுகள் நடும் விழாவில் அமைச்சருடன் பங்கேற்றார். இன்று அவரும் மாவட்டம் முழுவதும் அதிகாரிகளை மரம் வளர்ப்பதில் உற்சாக படுத்தி மரம் வளர்ப்பு பற்றிய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

நாங்கள் இந்த ஆண்டு மழைக்காலம் முடிவதற்குள் சுமார் 20000 மர கன்றுகளை நட்டு வளர்க்க உள்ளோம். நண்பர்களே முடிந்தால் தாங்களும் தங்கள் பகுதிகளில் இந்த நல்ல காரியத்தை தொடங்கலாமே ...! தகுந்த ஆலோசனைகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். நல்ல உள்ளம் கொண்ட ஒரு சிலரை ஓன்று சேர்த்தால் போதும்.

மேலும் எங்களுக்கு உங்களை போன்ற சமுதாய நலனில் ஆர்வம் கொண்ட நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது. நான்கு அடி அல்லது ஐந்து அடி நன்கு வளர்ந்த மரகன்றுகள் ஆயிரக்கணக்கில் தேவைப்படுகிறது. ( வேம்பு .. புங்கன், அரசு, நீர்மருது, தூங்கு வாகை, மகாகனி அல்லது உங்கள் பகுதியில் உள்ள நல்ல வளர்ந்த மரக்கன்றுகள் ) உங்கள் பகுதி நர்சரிகளில் (செடிகள் விற்பனை செய்யும் இடங்கள் ) இவ்வாறான வளர்ந்த மர கன்றுகள் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு உடனே தெரிவிக்கவும் ..! விலை விபரங்களை தெரிவிக்கவும் அதற்கு உரிய விலை கொடுத்து நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் தாங்களும் நமது மண்ணை பசுமையாக்கும் இந்த நல்ல முயற்சியில் எங்களுக்கு உதவுங்கள் ...!

முடிந்தால் உங்கள் பகுதியில் பசுமை இயக்கத்தை துவங்குங்கள் ,,,! ஈசா வின் பசுமை கரங்கள் நல்ல ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்கள் ...! உங்களுக்கு பெருந்துறை பசுமை இயக்கமும் உதவியாக இறுக்கிறோம். நன்றி.

அன்புடன்
மு. முருக பூபதி

எழுதியவர் : வெற்றிநாயகன் (15-Oct-14, 6:21 am)
சேர்த்தது : மு முருக பூபதி
Tanglish : pasumai ventukol
பார்வை : 192

மேலே