என் மன மகளே

ஒரு நாள் பெய்யும் மழைக்காய் வானம் பார்த்துக் காத்திருக்கும் வனத்தைப் போல...
ஒரு சிசு பிரப்பதர்க்காய் பத்துத்திங்கள் சுமைதாங்கிக் கிடக்கும் தாயவள் போல..
ஸ்பரிசம் பட சுருங்கிவிடினும் நின் தீண்டலுக்காய் காதிருக்கும் தொட்டாசுருங்கியைப் போல..
வெற்றுப் பாதம்பட நீ அமர்ந்து கொலமிடுவாயென மார்கழிக்காய்க் காத்திருக்கும் தெருவைப் போல...
கூந்தல்நுனி நீர்த்துளி படுவதற்காய் நீ தலை துவட்டக் காத்திருக்கும் அரை சுவரைப் போல...
புன்முருவ நாணத்தால் சரி என நின் இமைகள் தரும் ஒற்றை அசைவுக்காய் காத்திருக்கிறேன்...
ஏர்முனை கொண்டு அகழ்ந்தாலும் நெல் தந்து பசி அகற்றும் நில மகளைப் போல...
உன் மனமுழுது முனைகிறேன்... என் யுகம் தழைக்க மொழிவாய் -அன்பே
நீ என்னவள் என்றே.