முடியும் என்றால்
காலையில் எழுந்ததும்
அம்மாவின் முகம்
கைகளில் காபியுடன் ....
எழுந்திருப்பா...நேரமாச்சு
உனக்கு என்ன டிபன் செய்யனும்....?
என்ன சாப்பாடு செய்யணும் ...?
குளிக்க வெந்நீர் போடவா...?
அண்ணா! இந்தாங்கண்ணா ப்ரஷ் பேஸ்ட்
தங்கையின் பாசம்
இந்தப்பா குளிச்சிட்டு இந்த சட்டைய போட்டுக்க
எங்கும் அப்பா.
இன்னைக்கு எல்லோருக்கும் என்னாச்சு.....
ஆச்சர்யத்தில் விழித்தேன் நான்...
என்னடா பார்கிற..?
உன்னை பார்க்க பொண்ணு வீட்டுக்காரங்க வர்றாங்க
ஒழுங்கா நடந்துக்க இந்த இடமும் வேணான்னு சொன்ன
அவ்ளோதான் ....!
புரிந்து கொண்டேன்
அன்பான குடும்பம் .....
வெளிநாட்டு மோகத்தால் என்னை நானே ....
புரியாமல் முடியாமல்
புரிந்துகொள்ள முயற்சித்தேன் ....
இனியாவது எந்த குடி பழக்கமும் இல்லாமல்
நல்லவனாக நல்ல பேரோடு....!