இன்றைய சுதந்திரம்

விளைவு தெரியாத விட்டில் பூச்சிகள்
காமத்தீயில் கருகி சாம்பலாய் .......

சுகங்களின் கூடுதலுக்கு
சுதந்திர தேடல்
அரை நாகரீக உடைகளின்
அன்றாட அணிவகுப்பு ............

வாசல்தாண்டாதவர்கள்
எல்லைகள் தாண்டிட
தொல்லைகளும் துன்பமும்
பரிசாய் .............

வாய்பேசி வாய்ப்பேசி
கைப்பேசியில் கரைந்து போகிறது
இளசுகளின் இன்றைய
எதிர்காலம் .............

காசுக்காக கற்ப்புகூட கைமாறுகிறது
கசப்பான உண்மை -
சிலருக்கு சுவாரசியம்
பலருக்கு அதிசயம் .............

எழுதியவர் : வினாயகமுருகன் (16-Oct-14, 7:25 am)
பார்வை : 91

மேலே