கருவே கரு---------அஹமது அலி-----

நீர்மத்தின் சேர்மத்தில்
நிரவி........
நீள்கோள வடிவத்தில்
நீந்தி.........
கூழ்மத்தின் நிலையிலே
கூடி..........
கூறுபாட்டில் வண்ணம்
இருவேறாகி........
ஓடொன்று கூடாய்
ஒடுங்கி.......
சூடுகண்ட கதகதப்பில்
மெருகி.......
சூல் கொண்ட கருவது
உயிர்த்து.....
கூடுடைத்து ஒடுபிரித்து
குதிக்க,......
குட்டி உயிர் உலகில்
பிறக்குது......!