நன்றி நன்றி அனைவருக்கும்
விடுப்பில் சென்றேன் விழாவின் காரணமாய்
விழாவும் முடிந்தது விண்ணளவு வாழ்த்துடன் !
விரைவு திட்டம்தான் விரிவுரையாய் இனித்தது
விழாவின் விமர்சனமோ விருந்தாய் சுவைத்தது !
தலைமை வகித்த நிகரில்லா நீதியரசரும்
தலைப்புகளை அடுக்கி அழகாய் வாழ்த்தினார் !
தளத்தின் நாயகர் நல்லாடைதந்த நம்அகனார்
தவறாது கலந்திட்டு உளமாற வாழ்த்தினார் !
கோவை பொதிகையின் பொன்மகள் ஆண்டாள்
கோர்த்திட்ட பாமாலை நூலுக்குஒரு பூமாலை !
வாழ்வியல் முறைகளை முறையாக கூறினார்
வாழ்விற்கு வழிகாட்டி சொக்கிடும் சொக்கலிங்கம் !
நகைச்சுவை விருந்து படைத்தார் ஜெயப்பிரகாசம்
நடையழகும் சொல்லழகும் அருமையோ அருமை !
நூலின் அறிமுகத்தை நுணுக்கமாய் நுகர்ந்திட்ட
ஆரணி அறவாழியார் தெளிவாய் தெரிவித்தார் !
வாசமிகு வரவேற்புரை வாடாத மல்லிகைபோல்
பாசமிகு கலைஅரசன் பாங்குடனே அளித்திட்டார் !
பேராசை அறியாதநம் பேராசிரியர் வேல்முருகன்
போர்முரசாய் அறிவித்தார் நன்றி உரைதனையும் !
தளத்தின் மரபுமாமணி மாண்புமிகு காளியப்பனார்
காளமேக புலவராய் கவிதையில் வாழ்த்தினார் !
இடையில் மேடையேறி இளங்காளை வீரமுடன்
இரத்தின சுருக்கமாய் வாழ்த்தினார் சா கணேசனார் !
அடியேன் பிறந்ததும் உணர்வலைகள் பிறந்ததும்
அக்டோபர் பன்னிரெண்டே அறிந்திடுவீர் நீங்கள் !
அதனாலே அந்நாளும் திருவிழாவாய் மாறியது
அறிந்திட்ட நெஞ்சங்கள் ஆனந்தத்தில் குதித்தது !
வாழ்த்திய உள்ளங்கள் வாழ்ந்திடுநீ நூறாண்டென
வாஞ்சையுடன் வாழ்த்தியது வஞ்சமிலா நெஞ்சுடன் !
வாழ்த்திடவும் விரும்பினர் வந்திடுவோம் என்றனர்
வந்திருந்த நல்நெஞ்சங்கள் நூற்றாண்டு விழாவிற்கு !
உணர்வுகள் உறைந்தது உள்ளமும் நிறைந்தது
உலகிலே வாழ்ந்ததற்கு நற்பலனும் கிடைத்தது !
உள்ளவரை எழுதிடுவேன் உள்ளத்தில் எழுவதை
உண்மையை உரைப்பேன் உயிர்மூச்சு பிரியும்வரை !
அழகு தமிழில் அழகையும் அன்பையும் இணைத்து
அருமையாய் தொகுத்திட்ட குயிலாம் சஹானாவும்
குறும்பட குரலோன் குலோத்துங்க சோழனாம் நம்
சிம்மக் குரலுக்கு சொந்தக்காரன் சுந்தரேசனும் வாழ்க !
கலந்து கொண்டு சிறப்பித்த அனைவரும் வாழ்க !
நேரினில் வந்து வாழ்த்திட இயலாது ஏங்கிடும்
பாரினில் உள்ள எழுத்து நண்பர்களுக்கும் நன்றி !
காணொளி கண்டு கலங்கிட்டு வாழ்த்தியோரே
கையொலியும் கேட்டது விண்வெளி வழியாய் !
உங்களுக்கும் நன்றி உள்ளம் நிறைந்தது !
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் !
பழனி குமார்