ஒரு காதல் போராட்டம்

ஒரு காதல் போராட்டம்
கண்ணோடு நீரோட்டம்
மனதிலே தடுமாற்றம்
மதம்பிடித்த ஒரு கூட்டம்

மனதினை பார்க்கும் காதல்
மதத்தினால் விலகும் நேரம்
மரணம் எப்படி தீர்வாகும்
வாழ்வதுதானே சாரம்

உண்மை காதலா என
சோதிக்க தவறில்லை
மதத்தை காரணம் காட்டி
பிரித்திட காதல் கொடியுமில்லை

ஜாதி என்பது கிடையாது
காதல் அதுதான் நீ கூறு
ஜாதி பார்த்து காதல் வந்தால்
அதன்பெரே வேறு ...

எழுதியவர் : ருத்ரன் (16-Oct-14, 7:02 pm)
பார்வை : 92

மேலே