உன் காதல் வந்திருக்கும்

என் கவிதைக்கு வாய் முளைத்தால்
உன் காதல் வந்திருக்கும்
உன் மௌனத்திற்கு விடுப்பு விட்டால்
உன் காதல் வந்திருக்கும்

மதங்கள் மறந்து போனால்
உன் காதல் வந்திருக்கும்
அழகை காண மறந்தால்
உன் காதல் வந்திருக்கும்

மனங்கள் முதன்மையானால்
உன் காதல் வந்திருக்கும்
என் கவிதை புரிந்து போனால்
உன் காதல் வந்திருக்கும்

என் நேசம் மட்டும் நீ பார்த்தால்
உன் காதல் வந்திருக்கும்
என் இதய துடிப்பை கேட்டால்
உன் காதல் வந்திருக்கும்

எழுதியவர் : ருத்ரன் (16-Oct-14, 6:52 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 84

மேலே