என்னை நேசிக்க
என்னை நேசிக்க
உனக்கு தெரியவில்லை
உன் மௌனம் வாசிக்க
என்னால் முடியவில்லை
என் கண்கள் பேசுவதை
மொழிபெயர்க்க ஆளிலில்லை
என் மனதின் வார்த்தைகள்
உன் காதில் விழவில்லை
உன்மேல் காதலென
சொல்லிட ஒரு தயக்கம்
மறுத்தால் என்னாகுமோ
என்பதில் ஒரு நடுக்கம்
நீயே காதல் சொல்லிட
ஒற்றை பார்வை போதுமே
அதை நான் புரிந்து கொள்ள
இன்னொரு ஜென்மம் வேண்டுமே