மின்னலின் மடியில்-வித்யா

மின்னலின் மடியில்....!!-வித்யா

மெல்லொளி நடை பயிலும்
நந்தவனமொன்றில்
திரும்பிய திசையெங்கும்
சோகத்தோடு
தேன்சிட்டுகள்..........

வாழும் மரங்களின்
இறந்த கிளைகளில்
மழைக்கு ஒதுங்கிய
மைனாக்கள்.........

மேகம் தீண்டித் தீண்டி
ரோஜாவின் முகத்தில்
பனிமழைத் தூவிய
வானம் பாடிகள்........

மலைகளின் சுவர்களில்மோதி
இடியை எச்சரிக்கும்
கழுகுகள்..........

காற்றின் குரல்வளைக்கடித்து
இரத்தம் உறிஞ்சும்
உதிர்ந்த சிறகுகள்......

மின்னலின்
மடித்தேடிடும்
மௌன ராகங்கள்.......

=====மரணப்படுக்கையில்
இயற்கை
வாழ்வாதாரங்கள்........!!========


=இயற்கை காப்போம்....!!

எழுதியவர் : வித்யா (16-Oct-14, 8:19 pm)
பார்வை : 101

மேலே