கோலமயில் தந்தாள் எழில் - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

பூங்காவின் தோட்டத்தில் பார்த்த அணிலுக்கு
நீங்கா எழிலுடைய செவ்வழகி - பாங்காக
நீல நிறஜீன்சு, மேலாடை போட்டுணவு
கோலமயில் தந்தாள் எழில்.
பூங்காவின் தோட்டத்தில் பார்த்த அணிலுக்கு
நீங்கா எழிலுடைய செவ்வழகி - பாங்காகக்
கீழமர்ந்து தோதாக வேஉண்ண ரொட்டிதரும்
நீழலான காட்சிதனைக் காண்!
பூங்காவின் தோட்டத்தில் பேரணிலைப் பார்த்ததுமே
நீங்கா எழிலுடைய செவ்வழகி - பாங்காய்த்
தலைசீவிக் கார்குழலாள் தாழ்வாக நோக்கி
அலையெனக் கண்குளிர்ந்தால் இன்று!